• waytochurch.com logo
Song # 27075

பயங்கர பராக்கிரமம் செய்யும் தேவன் இருப்பதினால்


அவர் மா அன்பினால் என்னை மாற்றி தினம்

அதிசயம் காட்டி இணங்கச் செய்தார்

ஜெயித்திடுவேன் வீழ்த்திடுவேன்

தேவாவி என் மீது தங்குவார் - பயங்கர
அவர் நல்லவரே அவர் வல்லவரே

சோதித்து அறியும் கர்த்தரிவர்

தேர்ச்சி என்றும் உண்டாகும்

காரியம் அவர் மீது சாட்டினேன் - பயங்கர
அவர் நான் நம்பிடும் எந்தன் தேவனாவார்

உதவிகள் அவரால் கிடைத்திடுமே

உண்மையினை காத்திடுவேன்

எனக்காக யாவையும்செய்குவார் - பயங்கர
அவர் வார்த்தை என்றும் எந்தன் உள்ளத்திலே

எரிந்திடும் தீ போல் பரவிடுதே

போதனையை பெற்றிடுவேன்

என்றென்றும் அவர் வாக்கை காப்பேன் - பயங்கர
அவர் நல்நாமத்தை என்றும் நான் பாடுவேன்

அவரது கரமே எழும்பிடுமே

விடுதலையை அளித்திடுவார்

எந்நாளும் அவர் நாமம் போற்றுவேன் - பயங்கர

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com