• waytochurch.com logo
Song # 27077

பகற்காலம் இருக்கு மட்டும் அறுவடை செய்வேனே


கண்களை ஏறெடுத்து பாருங்கள்

விளைந்த வயல் நிலத்தை காணுங்கள்

அறுப்பின் எஜமானே உம் சித்தமே

இன்று நான் செய்ய ஆயத்தமே - பகற்காலம்
நாடு நகரம் என்று நான் அலைந்திட

காடு மேடு என்று பாய்ந்து சென்றிட

இயேசு தெய்வம் என்று எங்கும் கூறிட

என்னை தந்துவிட்டேன் உம் கைகளில் - பகற்காலம்
எமது சேவை யார் செல்லுவார்

என்று கேட்கும் தேவனின் சத்தம்

என்னை அனுப்பும் என் இயேசுவே

என்னை அர்ப்பணித்தேன் வழி காட்டுமே - பகற்காலம்
இந்தியா இயேசுவை அறிந்து கொள்ள

சாத்தானின் ஆளகை அகன்று ஒழிய

எலியாவின் ஆவியும் அதிகாரமும்

என்னில் வந்திறங்க அருள் தாருமே - பகற்காலம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com