நேசிக்கும் நேசர் இயேசு உன்னை காத்து நடத்திடுவார்
உன்னதங்களிலே வாசம் செய்யும்
உன்னதமான தேவன் உண்டு
உந்தன் கவலையை அவரிடம் சொன்னால்
உடனே பதிலளிப்பார் - உனக்கு (2)
பாரினில் உழலும் பாவியாம் உனக்கு
பரிந்து பேசும் இயேசு உண்டு
பரன் பாதம் தேடியே வந்தால்
பரிவாய் பதிலளிப்பார் - உனக்கு (2)
அன்பாக உன்னை நன்றாக நடத்தும்
இன்ப தேவ ஆவி உண்டு
துன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால்
குனிவாய் பதிலளிப்பார் - உனக்கு (2)
வானமும் பூமியும் நிலைமாறினாலும்
என்றும் மாறா வார்த்தை உண்டு
அதிகாலையில் அவர் முகம் கண்டால்
அன்பாய் பதிலளிப்பார் - உனக்கு (2)