நேசர் இயேசுவின் மார்பிலே சாய்ந்திருந்தால் பேரின்பமே
ஆவியின் அருளே பொழிந்திடுதே
அன்பினால் இருதயம் நிம்பிடவே
அண்ணலின் கரமே அணைத்திடுதே
ஆறுதல் தேறுதல் பெருகிடுதே - நேசர்
தூயனாய் என்னையே பிரித்தெடுத்த
நேசரின் அன்பை நினைத்திடவே
உள்ளத்தில் உவகை உயர்ந்திடுதே
உன்னத பாடலே பிறந்திடுதே - நேசர்
தேவனின் சாயல் தரித்திடவே
வல்லமை விசுவாசம் பெருகிடுதே
சத்தியம் கிருபை இணைந்தென்றுமே
நித்திய நம்பிக்கை அளித்திடுதே - நேசர்