நித்தியானந்த கர்த்தர் இயேசுவே நித்தமும் பிரகாசிக்கின்றார்
சிறு மந்தையின் பெரிய மேய்ப்பன்
நெருங்கி வந்து நிற்பார்
சின்னவன் ஆயிரம் பதினாயிரம்
சேனைத் திரளாய் மாறுவான் -சீயோனிலே
உலகமெங்கும் சுவிசேஷத்தின்
உயர்ந்த கொடி பறக்கும்
திறந்த வாசலுள் பிரவேசித்து
சிறந்த சேவை செய்குவோம் -சீயோனிலே
நரக வழி செல்லும் மாந்தருக்காய்
நடு இராப்பகல் அழுதே
நம் தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
நனைந்து வருந்தி ஜெபிப்போம் -சீயோனிலே
அவமானங்கள் பரிகாசங்கள்
அடைந்தாலும் நாம் உழைப்போம்
ஆத்தும பாரமும் பிரயாசமும்
ஆல்லும் பகலும் நாடுவோம் -சீயோனிலே
எதிராளிகள் எதிரே பந்தி
எமக்காயத்தப்படுத்தி
எம்தலை எண்ணெயால் அபிஷேகித்தார்
எருகோ மதிலும் வீழ்ந்திடும் சீnhயனிலே