நித்திய கிருபை நீங்காத கிருபை சத்தியம் காத்திடும் கர்த்தனே அளிப்பார்
சத்துரு சேனை நெருங்கியபோதும்
சத்துவம் அளித்திடும் நித்திய தேவன்
தேடிடும் வேளை தேடியே வந்து
திவ்விய கிருபை அளித்திடுவாரே - நித்திய
உத்தமனாக நிலைபெற்று வாழ்ந்திட
கர்த்தரின் கிருபை அநுதினம் தேவை
சோதனை வேளை ஜெயம் பெற்று ஏகிட
தேவ கிருபை காலமே அளிப்பார் - நித்திய
கோதுமை மணியென மாய்ந்துமே சாக
ஊழிய பாதையில் கிருபையே தேவை
கழுகினைப் போல புதுபெலன் அடைந்திட
கர்த்தரின் கிருபையை நாடிடுவோமே - நித்திய
முற்றும் முடிய காத்திடும் கிருபை
முடிவில்லா இராஜ்ஜியம் சேர்த்திடும் கிருபை
தேடியே நாடி சென்றிடுவோமே
தேவ சமூகம் நாடிடுவோமே - நித்திய
கிருபையின் பூரணர் வெளிப்படும் நாளில்
மகிமையில் சென்றிட கிருபையே தேவை
சீயோனில் சேர்த்துமே நீடூழி காலமாய்
தேவ தேவனை தரிசித்து மகிழ்வோம் - நித்திய