• waytochurch.com logo
Song # 27087

நிகரே இல்லாத சர்வேசா திகழும் ஒளி பிரகாகா


துங்கன் இயேசு மெய் பரிசுத்தரே

எங்கள் தேவனை தரிசிக்கவே

துதிகளுடன் கவிகளுடன்

தூய தூயனை நெருங்கிடுவோம் - நிகரே
கல்லும் மண்ணும் என் கடவுளல்ல

கையின் சித்திரம் தெய்வமல்ல

ஆவியோடும் உண்மையோடும்

ஆதி தேவனை உணங்கிடுவோம் - நிகரே
பொன் பொருள்களும் அழிந்திடுமே

மண்ணும் மாயமாய் மறைந்திடுமே

இதினும் விலை பெரும் பொருளே

இயேசு ஆண்டவர் திருவருளே - நிகரே
தேவ மைந்தனாய் அவதரித்தார்

பாவ சோதனை மடங்கடித்தார்

மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்

மாளும் மாந்தரை மீட்டெடுத்தார் - நிகரே
கொந்தளித்திடும் அலைகளையும்

கால் மிதித்திடும் கர்த்தரவர்

அடங்கிடுமே அதட்டிடவே

அக்கரை நாமும் சேர்ந்திடவே - நிகரே
ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்

ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்

மறுபடியும் வருவேனென்றார்

மா சந்தோஷ நாள் நெருங்கிடுதே - நிகரே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com