• waytochurch.com logo
Song # 27091

நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் நான் சாபத்திலே மாண்டேன்


என் ஆத்ம மீட்பை அருமையாய்

இயேசாண்டவர் எண்ணினதால்

சொந்த தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய்

சிந்தி இரட்சித்தாரே - என்
கார்மேகம் போல் என் பாவங்கள்

கர்த்தர் அகற்றினாரே

மூழ்கியே தள்ளும் சமுத்திர ஆழம்

தூக்கி எறிந்தாரே - என்
என் ஜென்ம கரும பாவங்கள்

எல்லாம் தொலைத்தாரே

மன்னித்து என்றும் மறந்துவிட்டாரே

மா பரமானந்தம் - என்
இரத்தாம்பரம் போல் சிவப்பான

இதய பாவங்களை

பஞ்சையும் போலவே வெண்மையுமாக்கி

தஞ்சம் எனக்கீந்தார் - என்
மேற்கத் திசைக்கும் கிழக்குக்கும்

மா எண்ணிலா தூரம்

எந்தன் பாவங்கள் அத்தனை தூரம்

இயேசு விலக்கினார் - என்
நான் ஜலத்தினால் நல் ஆவியினால்

நான் மறுபடியும் பிறந்தேன்

தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக

தேடிக்கொண்டேன் பாக்யம் - என்
அங்கேயும் சீயோன் மலை மீதே

ஆனந்த கீதங்களே

ஆயிரம் ஆயிரம் தூதர்கள் சூழ

ஆன்பரைப் பாடிடுவேன் - என்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com