நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் அவர் நேற்றும் இன்றும்
கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள் தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார் - நான் பாடி
பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார் - நான் பாடி
தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனை
தேற்றிட வந்திடுவார்
கால் தளர ஊன்று கோலாய்
காத்திட வந்திடுவார் - நான் பாடி
நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே - நான் பாடி