• waytochurch.com logo
Song # 27098

நான் ஆயத்தமானேன் ஆண்டவரைச் சந்திக்க நித்திய மகிழ்ச்சி அடைவேன்


மணவாளன் தட்டும்போது ஆயத்தமே

மங்கிடாதே என் விளக்குகளே

ஜீவ சுடர் ஒளியாய் ஜொலிப்பேன்

தேவப்பிதா தங்கும் மாளிகையில் - நான்
சுபதின வெண்வஸ்திரம் ஆயத்தமே

சீருடனே நான் தரித்திடுவேன்

ஆட்டுக் குட்டியாவர் விருந்தில்

ஆன்பரோடே நானும் வீற்றிருப்பேன் - நான்
சுவிசேஷ பாதரட்சை ஆயத்தமே

சேவையில் நான் அணிந்திடுவேன்

இயேசுவின் நாள் வேகம் நெருங்கிடுதே

இந்த நற்செய்தியைச் சாற்றிடுவேன் - நான்
பாடுபட்டு மரிக்கவும் ஆயத்தமே

பாரினில் என் இயேசுவுக்காய்

பற்பல துன்பங்கள் சகித்திடுவேன்

பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவேன் - நான்
எக்காளங்கள் தொனித்திட ஆயத்தமே

என் அரும் இயேசு வருகிறாரே

ஆமென் என் இயேசுவே வாரும் என்றேன்

ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன் - நான்
பரலோகம் செல்ல நானும் ஆயத்தமே

பொன் நகரம் நான் சுதந்தரிப்பேன்

அல்லேலூயா பாடிப் பறந்திடுவேன்

ஆண்டவர் அழைத்திடும் நாளதில் - நான்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com