• waytochurch.com logo
Song # 27099

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய் நன்றியால் என்னுள்ளம் பொங்கி வழிந்திட


இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்

சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்

நிந்தை துன்ப துயரநேரங்களிலும் உம்

நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் - அன்பின்
மீட்டுக் கொண்டீர் மானிடரின் நடுவினின்று

நீதியின் கனியாய் மகிமையில் துலங்க

நற்குல திராட்சக் கொடியாய் உம்மோடிணைந்து

நாதனே உம் தோட்டத்திலே நானும் நிலைக்க - அன்பின்
மேலோகத்தில் உம்மையல்லா தாருண்டெனக்கு

பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே

உம் ஆலோசனையின்படி என்னை நடத்தி

உந்தன் மகிமையிலே நீர் ஏற்றுக் கொள்வீரே - அன்பின்
ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில்

ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே

தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க

தேகம், ஆத்துமா, ஆவியையும் ஒப்புவிக்கின்றேன் - அன்பின்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com