• waytochurch.com logo
Song # 27100

நாடும் துறைமுகம் சேர்ந்து மகிழ நாதன் இயேசு வழியாவார்


வல்லவர் இயேசுவை முன்வைத்து

அவர் சித்தம் செய்திடுவோம்

அமைதல் அருளி அனுதினமும்

மகிழ்வை இயேசு அளித்திடுவார் - நல் - நாடும்
கடலின் சீறும் அலைகள் அமர்த்தியுமே

அதன் அமளியை அடக்குகின்றார்

நாதன் இயேசுவை Þதோத்தரித்து

நாடி ஏகியே சேர்ந்திடுவோம் - வல்ல - நாடும்
இதய தாகம் நிறைந்த அனைவரையும்

அவர் திருப்தி அடைய செய்வார்

தவனமுள்ள யாவரையும்

நன்மை அளித்து சேர்த்திடுவார் - என்றும் - நாடும்
இக்கட்டு நாளில் தேடும் யாவருக்கும்

அவர் பதிலை அளித்திடுவார்

சகல கட்டுகள் அறுத்திடுவார்

அன்பர் இயேசு நடத்திடுவார் - நாடும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com