• waytochurch.com logo
Song # 27102

நல்மேய்ப்பன் இவரே இயேசு நல்மேய்ப்பன் இவரே


ஆடுகள் பெயரினை ஆயனே அறிவார்

அழியாமை ஜீவன் அளித்திட வந்தார்

ஆடுகள் முன்னே செல்லுகின்றார்

அவரின் பின்னே சென்றிடுவோம் - நல்மேய்ப்பன்
கள்வர் மந்தையை வாடிடும்போதும்

கயவரின் வஞ்சக வலை வீசும் போதும்

பிள்ளையைப் போல தோள்களிலே

கள்ளமில்லா துயில் கொண்டிடுமே - நல்மேய்ப்பன்
மேய்ப்பனின் குரலை அறிந்திடும் மந்தை

மேய்ப்பனின் சித்தம் செய்திடும் ஆடுகள்

குரலொலி கேட்டு தேடிடுமே

குயவனின் கையில் அடங்கிடுமே - நல்மேய்ப்பன்
இயேசுவே வாசல் இயேசுவே வழியாம்

அவர் வழி சென்றால் மேய்ச்சலைக் காண்பாய்

ஆண்டவன் இணைத்த மந்தையிலே

அநுதினம் நீயும் செயல்படுவாய் - நல்மேய்ப்பன்
பெரிய மேய்ப்பர் வெளிப்படும்போது

வெகுமதி யாவும் அளித்திடுவாரே

நீதியும் பரிசுத்தம் காத்திடுவோம்

புனிதரின் இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம்

நல்மேய்ப்பன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com