நம்பியே வா நல்வேளையிதே உன் நேசர் இயேசுவையே நம்பிடுவாய்
கர்த்தரிடம் விசுவாசமே
ககளவு உனக்கிருந்தால்
கதறிடும் உன்னை காத்திடுவார்
கலங்கிடாமல் நீ நம்பிடுவாய் - நம்பியே
திக்கற்றோரின் தகப்பனவர்
தவிக்கும் விதவையின் தேவனவர்
அமைதியிழந்து கண்ணீரோடே
அலைந்திடாமல் நீ நம்பியே வா - நம்பியே
கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் செவி மந்தமாகவில்லை
தேவனின் பின்னே உன் வினைகள்
தடுத்து ஜெபத்தைத் தள்ளிடுதே - நம்பியே
சூரியனின் கீழ் உள்ளவை
சகலமும் வெறும் மாயையல்லோ
மானிடர் என்றும் மாறிடுவார்
மாறாத இயேசுவை நம்பிடுவாய் - நம்பியே