• waytochurch.com logo
Song # 27108

நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய எல்லா


செங்கடல்தனை நடுவாய் பிரித்த

எங்கள் தேவனின் கரமே

தாங்கியதே இந்நாள் வரையும்

தயவாய் மா தயவாய் - ஆ - நன்றியால்
உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை

உடன் சுதந்தரராய் இருக்க

கிருபையின் மகத்தானமது வருங்

காலங்களில் விளங்க - ஆ - நன்றியால்
ஜீவனைத் தியாகமாய் வைத்த பலர் கடும்

சேவையில் மரித்தார்

சேர்ந்து வந்து சேவை புரிந்து

சோர்ந்திடாது நிற்போம் - ஆ - நன்றியால்
மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய

மா பெருங் கிருபை

மா நிலத்தோர்க் கீந்தாரேசு

சுவிரேஷ ஒளியால் - ஆ - நன்றியால்
அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை

அறிந்தே வந்திடுவீர்

அளவில்லா திரு ஆக்கமிதனை

அவனியோர்க் களிப்பீர் - ஆ - நன்றியால்
சீயோனைப் பணிந்துமே கிறிÞதேசு இராஜனாய்

சீக்கிரம் வருவார்

சிந்தை வைப்போம் சந்திக்கவே

சீயோனின் ராஜனையே - ஆ - நன்றியால்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com