தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை இராஜாதி ராஜனை
அற்புதமான அன்பே - என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே - Þதோத்
ஜோதியாய் வந்த அன்பே - பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே - Þதோத்
மாய உலக அன்பை - நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே - Þதோத்
ஆதரவான அன்பே - நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னதமா தேவ அன்பே
உள்ளம் கவரும் அன்பே - Þதோத்
வாக்கு மாறாத அன்பே - திரு
வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே - Þதோத்