• waytochurch.com logo
Song # 27119

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம் பாதம் தொழுகிறோம்


வானம் உமது சிங்காசனம்

பூமி உமது பாதஸ்தலம்

பணிந்து குனிந்து தொழுகிறோம்

கனிந்தெமை கண்பாருமே - தேவா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்

சாந்த சொரூபி என் இயேசுவே

ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்

ஆண்டவரைத் தொழுகிறோம் - தேவா
கர்த்தர் செய்த உபகாரங்கள்

கணக்குரைத்து எண்ணலாகுமோ

இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி

இரட்கரைத் தொழுகிறோம் - தேவா
கர்த்தர் சமூகம் ஆனந்தமே

பக்தர் சபையில் பேரின்பமே

கர்த்தர் நாமத்தை கொண்டாடுகிறோம்

சுத்தர்கள் போற்றும் தேவனே - தேவா
நூற்றிருபது போர் நடுவே

தேற்றரவாளனே வந்தீரே

உன்னத ஆவியை ஊற்றிடுமே

மன்னவனே இந்நேரமே - தேவா
எப்போவருவீர் என் இயேசுவே

ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே

பறந்து விரைந்து தீவிரமே

இறங்கி வாரும் இயேசுவே - தேவா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com