• waytochurch.com logo
Song # 27121

தேவா உம்மை நான் நம்புவேன் அதிகாலை தேடினேன்


காலை தோறுமே

உந்தன் கிருபை புதியதே

தேவனே உம் சாயலால்

திருப்தியாக்கிடும் - தேவா
காலை விழிப்பினால்

உந்தன் நேச மொழியதை

கேட்டுமே இந்நாளெல்லாம்

மகிழச் செய்யுமே - தேவா
கடந்த இராவினில்

எம்மை காத்த இயேசுவே

படைக்கிறேன் இக்காலையில்

கிருபை தாருமே - தேவா
தாகம் தீர்த்திடும்

நல்ல ஜீவ தண்ணீரே

உந்தன் பாதம் அமர்ந்துமே

தியானம் செய்குவேன் - தேவா
மீட்பர் இயேசுவே

எந்தன் ஆத்மநேசரே

நாளெல்லாம் உம் பாதையில்

செல்ல நடத்துமே - தேவா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com