தேவனை உயர்த்தித் துதியுங்கள் அவர் நாமத்தைப் போற்றியே
கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரமென்றும்
ஆரவாரம் என்றுமே - தேவனை
இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம்
இவர் பகைவநன வென்று கீழ்ப்படுத்தி
வென்று கீழ்ப்படுத்தினார் - தேவனை
கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள்
பக்தருக்கென்று பலத்த நகரம்
பலத்த நகரம் உண்டு - தேவனை
அன்னியர் ஆள்வதில்லை இந்நிலம் தன்னில் நம்மை
மன்னாதி மன்னனே நம் மகிபனாயிருப்பார்
மன்னரும் தேவ சமாதானந் தங்கும்
சமாதமானம் தங்கிடுமே - தேவனை
புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்புவார்
பனிபோல் கிருபையை பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
இன்னல் பெருகிடுமே - தேவனை
மறைவிடமுண்டு மன்னனின் ஜனத்திற்கே
குறை விசாரிக்கும் கோபத்தின் நாளிலே
அறைக்குள் மறைந்து ஆனந்திக்கும் சபை
ஆனந்திக்கும் சபையே - தேவனை
சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
அருந்த யாவருக்குஙம் ஆயத்தமாக்குவார்
நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
கண்ணீரைத் துடைத்திடுவார் - தேவனை