தேவனால் கூடாதது ஒன்றுமில்லை எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும்
அவர் ஆவியினால் விடுதலை உண்டு
அவர் ஆவியினால் வல்லமை பெறுவாய்
புதிய பெலனை பெற்றிடுவாய் ஶி (2) - தேவ
அவர் சொல்ல ஆகும் கட்டளைக்கு நிற்கும்
வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார்
வசனம் தீவிரமாய் செல்கின்றதே - தேவ
அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்று
விசுவாசித்தால் மகிமையை காண்பாய்
விசுவாசித்தால் கண்டிடுவாய் - தேவ
ஆராய்ந்து முடியா காரியங்களையும்
எண்ணி முடியா அதிசயங்களையும்
அற்புதர் இன்றே செய்திடுவார் - தேவ