• waytochurch.com logo
Song # 27130

தேவன் நம் அடைக்கலமும் பெலனும் ஆபத்துக் காலத்திலே


பர்வதம் அதிர்ந்தாலும் - இந்த

பூமி நிலை மாறினாலும்

ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும்

பயப்படோம் நாமே - தேவன்
ஓடும் ஓர் நதியுண்டே - அதின்

நடுவில் நம் தேவனுண்டே

பொங்கும் சந்தோஷம் எங்கும் நிரம்பும்

தேவன் அதின் சகாயம் - தேவன்
ஜாதிகள் ராஜ்ஜியங்கள் - மிக

வேகம் கொந்தளிக்கின்றதே

சேனையின் கர்த்தர் நம்மோடிருக்க

தேவன் நம் அடைக்கலமே - தேவன்
பூமியின் பாழ்க்கடிப்பை - பாரும்

கர்த்தர் நடப்பிக்கின்றாரே

யுத்தம் நிருத்தி வில்லை ஒடித்தார்

கர்த்தரின் செயலிதுவே - தேவன்
அமர்ந்திருந்து நானே - தேவன்

என்று அறிவீர் என்றாரே

ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே

கர்த்தர் உயர்ந்திருப்பார் - தேவன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com