தேவ சாயல் ஆக மாறி தேவனோடிருப்பேன் நானும்
அந்த நாளும் நெருங்கிடுதே
அதிவிரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் - தேவ
பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் - தேவ
சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் - தேவ
ஆவியின் அச்சார மீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே - தேவ
காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகு போல பறந்தெழும்பி
ஜீவ யாத்திரை ஓடி முடித்து
ஜீவக் கிரிடம் பெற்றிடுவேன் - தேவ
மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவலைர
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே - தேவ
உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை ஏசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவிப்பேனே நீடுழியாய் - தேவ