தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலா
பயத்தோடே நல் பக்கியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் - தேவ
ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே - தேவ
இராப்பகலாய் தம் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் - தேவ
உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் - தேவ
சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே - தேவ
ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம் - தேவ