• waytochurch.com logo
Song # 27137

தேடுங்கள் கண்டடைவீர் தேவ தேவனின் தூய திருமுகம் காண


சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் - எந்த

சேதமும் வந்தணுகாமல்

இந்தப் புதுதினம் கண்டடைய

தந்தனரே தமது கிருபை - தேடுங்கள்
நல்ல சுகம் பெலன் தந்து - தம்

வல்ல நல் ஆவியும் ஈந்து

வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து

சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார்- தேடுங்கள்
ஊண் உடை தந்தாதரித்து - இந்த

ஊழிய பாதையில் காத்து

கூப்பிடும் வேளை செவிகொடுத்து

கேட்டிடும் யாவையும் ஈந்தனரே - தேடுங்கள்
ஜீவனும் உள்ள நாளெல்லாம் - என்

தேவனைக் கீர்த்தனம் பண்ணி

ஓசையுள்ள கைத்தாளத்தோடே

நேசைய்யா இயேசுவை Þதோத்தரிப்போம் - தேடுங்கள்
காலையில் Þதோத்திரக் கீதம் - இந்த

வேளையில் வேதத்தின் தியானம்

நல்ஜெப தூபம் எனது இன்பம்

நற்கிரியைகளும் செய்துழைப்பேன் -தேடுங்கள்
கர்த்தரை நான் எப்பொழுதும் -என்

கண் முன்னில் நிறுத்தி நோக்க

நாள் முழுதும் அவர் பின் நடக்க

நேர்வழி பாதையுங் காட்டிடுவார் - தேடுங்கள்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com