தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம் தினம் உம்மையே நோக்கி பார்க்கி
உலக பெருமை இன்பமெல்லாம்
உமக்காய் இழந்தேனய்யா
உம்மைப் பிரிக்கும் பாவங்களை
இனிமேல் வெறுத்தேனைய்யா
உம் சித்தம் நிறைவேற்றுவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன் - தெய்வமே
உலகம் வெறுத்து பேசட்டுமே
உம்மில் மகிழ்ந்திடுவேன்
காரணமின்றி பகைக்கட்டுமே
கர்த்தரை துதித்திடுவேன்
சிலுவை சுமந்தவரை
சிந்தையில் நிறுத்துகிறேன் - தெய்வமே
எதை நான் பேச வேண்டுமென்று
கற்றுத் தாருமய்யா
எவ்வழி நடக்க வேண்டுமென்று
பாதை காட்டுமய்யா
ஒளியான தீபமே
வழிகாட்டும் தெய்வமே - தெய்வமே