• waytochurch.com logo
Song # 27139

தெய்வீக கூடாரமே என் தேவனின் சந்நிதியே


கல்வாரி திருப்பீடமே

கறைபோக்கும் திரு இரத்தமே

உயிருள்ள பரிசுத்த ஜீவப் பலியாக

ஒப்புக் கொடுத்தோம் ஐயா - மகிமை
அப்பா உன் சமூகத்தின்

அப்பங்கள் நாங்கள் ஐயா

எப்போதும் உம் திருபாதம் அமர்ந்திட

ஏங்கித் தவிக்கிறோம் - மகிமை
உலகத்தின் வெளிச்சம் நாங்கள்

உமக்காய் சுடர் விடுவோம்

ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா

ஆனல் மூட்டி எரிய விடும் - மகிமை
தூபமாய் நறுமணமாய்

துதிகளை செலுத்துகிறோம்

எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்

ஆவியில் ஜெபிக்கின்றோம் - மகிமை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com