தூயாதி தூயரே துதிக்குப் பாத்திரரே துதிக்கிறோம் உம்மையே முழு மனதோடே
கேருபீன்கள் சேராபீன்கள் ஓய்வில்லாமல் துதிக்கும்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
அனுதினம் அடியார் அகமகிழ்ந்தே நாம்
அன்போடே பணிவோம் அவர் பாதம் வீழ்ந்தே ஶி தூயாதி
எரிகோவின் கோட்டையை இடிந்து வீழ்ந்ததுவே
இஸ்ரவேலின் துதிகளின் ஓங்கிய சத்தத்தால்
எதிர்வரும் தடைகளை தகர்த்தியே வீழ்த்துவோம்
எண்ணில்லா துதிகளை ஓயாமல் செலுத்தி -தூயாதி
இருள் சூழ்ந்த உலகில் இன்னல்கள் வந்தாலும்
இறுதிவரை நாம் நிலைத்திருப்போமே
மரணமே வந்தாலும் உண்மையைக் காத்து
மகிழ்வுடன் பெறுவோம் ஜீவக்கிரீடமே -தூயாதி
பலத்தினால் அல்ல பராக்கிரமத்தாலல்ல
ஆவியினாலே ஆகும் என்றாரே
ஆதினதின் காலத்தில் நேர்த்தியாய் நடக்கும்
ஆமர்த்திருந்து அவர் செயல்களை அறிவோம் -தூயாதி
விசுவாச துரோகம் நேரிடும் காலம்
விசுவாசம் தந்து விழித்திருப்போம் நாம்
விரைந்து வரும் நம் இயேசு மணாளனை
விண்ணிலே சந்திக்கும் காலமிதல்லவோ -தூயாதி