• waytochurch.com logo
Song # 27143

தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க தூயவர் வருகையின் நாளுமே நெருங்குதே


மகிமையின் சாயலை மணவாட்டி அணிய

வெண்வஸ்திரம் கிரீடம் சூடியே மகிழ

பொற்றள வீதியில் நடந்துமே உலாவும்

அந்த நாள் வெகு சந்தோஷ நாள் (2( - தூதர்கள்
துன்பம் துக்கம் இல்லை என்றுமே இன்பம்

பஞ்சம் பசியில்லை என்றும் நிறைவே

தூதர்கள் போற்றிடும் தூயரை நினைத்தால்

அந்த நாள் வெகு சந்தோஷ நாள் - தூதர்கள்
திருடனைப் போல நானும் வருவேன்

தீவிரம் விழித்து ஜெபித்திருங்கள்

அன்பர் வாக்கை நான் என்றும் நினைத்தால்

அந்த நாள் வெக சந்தோஷ நாள் - தூதர்கள்
மன்னவர் இயேசுவை விண்ணவரோடு

முகமுகமாய்க் கண்டு துதித்துப் பாடிட

பொற்பாதம் முத்தம் செய்துமே மகிழ்ந்திடும்

அந்த நாள் வெகு சந்தோஷ நாள் - தூதர்கள்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் நான்

விண்ணவர் சேனையோடு பறந்திடுவேன் நான்

இரட்சகர் இயேசுவை கண்டிடுவேன் நான்

அந்த நாள் வெகு சந்தோஷ நாள் - தூதர்கள்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com