• waytochurch.com logo
Song # 27149

துதிப்பதே என் தகுதியல்லோ துதித்திடுவேன் என் இயேசுவை


வேதம் நிறைந்த இதயம் தந்தார்

ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்

கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்

கருணை நிறைந்த கரங்கள் தந்தார் - துதிப்பதே
வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்

சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்

கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்

ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் - துதிப்பதே
மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்

தூய்மை நிறைந்த பார்வை தந்தார்

சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்

செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் - துதிப்பதே
ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்

பெலவீனம் நேரத்தில் பெலன் தந்தார்

செய்தி நேரத்தில் தூது தந்தார்

பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் - துதிப்பதே
வளம் நிறைந்த வாழ்வு தந்தார்

மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்

அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்

ஆவி நிறைந்த அறிவு தந்தார் - துதிப்பதே
சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்

சத்தியம் நிறைந்த சபை தந்தார்

இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்

ஒளி நிறைந்த வழி தந்தார் - துதிப்பதே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com