• waytochurch.com logo
Song # 27151

துதித்திடுவேன் தூயவர் இயேசுவை தூய ஆவியால் நிறைந்து மகிழ்ந்து


அக்கினி சோதனை அலை மோதும் போதும்

உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்

உம்மாலே மதிலைத் தாண்டி சென்றிட

பெலனும் ஈந்திரே - உம்மை

போற்றாமல் துதியாமல் இருப்பேனோ 2-துதி
முன்னும் பின்னும் உம்வழியை

அறியாமல் திகைக்கும் வேளையில்

செம்மையான பாதையில் நடக்க

வழியையும் காட்டினீரே - உம்மைப்

போற்றாமல் துதியாமல் இருப்பேனோ?
பெருவெள்ளம் சீறி மோதுகையில்

பெரு கன்மலையின் நிழலுமானீர்

உறுதியாய் உம்மில் நிலைத்து நிற்க

உறைவிடம் அளித்தீரே - உம்மை

போற்றாமல் துதியாமல் இருப்பேனோ
யோர்தான் போன்ற சோதனைகள்

பிரவாகித்து வரும் வேளையிலே

மனம் பதாறாமல் நிலைத்து நின்று

கனி தரச் செய்தீரே - உம்மைப்

போற்றாமல் துதியாமல் இருப்பேனோ

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com