துதிக்கின்றோம் தூயா திரியேக தேவனே தேவா துதி கேட்டு மகிழ்வீர் என் இயேசு
அபிஷேகம் தந்தெம்மை சாட்சியாய் மாற்றிடுமே
வல்லமை வரங்களால் நிரப்பிடுமே
உலகம் மாமிசம் சாத்தானை ஜெயித்த எம் தேவா
உத்தமர் இயேசுவே வந்திடுவீர்
உத்தமராகவே எந்தனை மாற்றிட
இயேசுவே உம் கிருபை தந்திடுவீர் 
 தேவைகள் நிறைந்திட்ட உலகினில் வாழுகின்றோம்
தேவைகள் அனைத்தும் தந்திடுவீர்
மகிமையின் தேவனே குறைவெல்லாம் நிறைவாக்கிட
சோர்ந்திடாதெம்மை நடத்திடுமே
ஆத்தும ஆதாயம் செய்திட எம்மையும்
இயேசுவே உம்மைப் போல் மாற்றிடுமே -2 துதி 
 அவமானம் நிந்தைகள் பாடுகள் சகித்திடவே
பெலன் தந்திடும் தேவா வந்திடுவீர்
மரணமோ ஜீவனோ நாசமோ மோசமோ நாதா
உமதன்பை பிரித்திட இயலாதல்லோ
எமக்காக நித்தமும் வேண்டுதல் செய்திடும்
இயேசுவே ஜெயபாதை நடத்திடுவீர் -2 துதி 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter