• waytochurch.com logo
Song # 27159

துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்வங்களை


தினந்தோறும் உம் தானங்சளால்

நிறைத்திடுமே எங்களை நீர்

திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே

கனிவோ டெங்களை உந்தன் காருண்யத்தால் - துதி
அலைமோதும் இவ்வாழ்க்கையிலே

அனுகூலங்கள் மாறும்போது

வழிகாட்டிடுமே துணை செய்திடுமே

கனிவோ டடியார்களை காருண்யத்தால் - துதி
உம்மை துதிக்கும் வேளையிலே

ஊக்கம் அளித்த கிருபையல்லோ

உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே

என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன் - துதி
வானம் பூமியை படைத்தவரே

வாரும் என்றே அழைக்கின்றோமே

என்று வந்திடுவீர் ஆவல் தீர்ந்திடுமே

கனிவோ டெங்களை உந்தன் காருண்யத்தால் - துதி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com