திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே
இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்குத் தங்கிடுவேன் - திருப்பாதம்
என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோbட்ன்னை நோக்கிடுமே - திருப்பாதம்
மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
ஏசுவே உம்மை அண்டிடுவேன் - திருப்பாதம்
என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே - திருப்பாதம்
உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே - திருப்பாதம்
சத்துரு தலை கவிழ்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
ஏசுவே இன்று காட்டிடுமே - திருப்பாதம்
விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரப்பாதைக் காட்டினீரே
மலர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன் - திருப்பாதம்
பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதறாமேல காத்திருப்பேன் - திருப்பாதம்