• waytochurch.com logo
Song # 27166

திரியேக தேவனைத் துதித்திடுவோம் நிதம் அவர் நாமத்தை உயர்த்திடுவோம்


பாவத்தில் ஜீவித்த காலத்திலே

பரிவுடன் இரட்சிக்க வந்தவரே

நீங்காத விசுவாசப் பாதையிலே

தாங்கினீர் உம் தயவால் - மீட்பரும்
சோதனை சூழ்கையில் ஜெயக்கொடியாய்

சேர்ந்திடும் உள்ளத்தில் மாபெலனாய்

தனிiயில் ஏற்றதோர் தோழனுமாய்

கனிவாய் கரம் பிடித்தீர் - மீட்பரும்
அபிஷேகம் செய்து எம் சிரசதனை

ஆனந்த சந்தோஷத்தால் நிறைத்தே

அகமதில் இன்ப கீதம் அளித்தே

மகிமையில் முடிசூட்டிடுவீர் - மீட்பரும்
எக்காள நாதம் வானில் முழங்க

ஏகிடுவார் சுத்தர் இயேசுவுடன்

அழிவற்றோராய் அவரோடிணைந்தே

ஆளுவோம் சீயோனிலே - மீட்பரும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com