• waytochurch.com logo
Song # 27170

தாங்கி நடத்தும் தேவகிருபை எத்தனை ஆச்சரியம் அதை


துன்ப நேரத்தில் ஆறுதல் அளிக்கும்

இன்ப கிருபை இது

தொல்லை கவலையில் கண்ணீர் துடைக்கும்

அன்பின் கிருபையிது - (2) அல்லேலூயா
நேசிப்பவர் எல்லாம் தள்ளிவிட்டாலும்

நேசரின் கரம் தாங்கும்

நண்பர் உற்றாரிலும் உண்மையுள்ளோர் அவர்

நம்புவேன் அவரை நான்- (2) அல்லேலூயா
பஞ்சம் வந்திடினும் அஞ்சிடேனே நான்

தஞ்சம் என் இயேசு உண்டு

வானத்தின் அப்பம் அவரே என் மீட்பர்

புசித்து வாழ்ந்திருப்பேன் - (2) அல்லேலூயா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com