தாகம் தீர்க்கும் ஜீவ நதி தரணியில் உண்டோ எனத் தேடினேன்
அருவியின் நீரை பருகிவிட்டேன்
ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்
துரவுகள் கடலும் தாகம் தீர்க்கவில்லை
தூரத்தைக் கானலாய் ஆகியதே -தாகம்
கானகம் சோலையும் தேடியபின்
வானகம் நோக்கியே அபயமிட்டேன்
கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன் -தாகம்
பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை
அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை
காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
கன்மலையாம் என் இயேசு நின்றார் -தாகம்
ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான்
ஆன்மாவின் தாகம் தீர்ந்ததென்றும்
புன்னகை பூத்து புனிதனும் மறைய
புதுபெலன் அடைந்தேன் என் உள்ளத்திலே -தாகம்