• waytochurch.com logo
Song # 27174

தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே


தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை

வாழ் நாளெல்லாம் அது போதும்

சுகமுடன் தம் பெலமுடன்

சேவை செய்ய கிருபை தாருமே - தம்
நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை

நீசன் என் பாவம் நீங்கினதே

நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்

காத்துக் கொள்ள கிருபை தாருமே - தம்
தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை

மனம் தளர்ந்த நேரத்திலும்

பெலவீன சரீரத்திலும்

போதுமே உம் கிருபை தாருமே - தம்
மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை

மூடும் திரை கிழிந்திடவே

தைரியமாய் சகாயம் பெற

தேடி வந்தேன் கிருபை தாருமே - தம்
ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை

என்றும் மறவேன் வாக்குத்தத்தம்

நீதியுமே சமாதானமே

நிலை நிற்கும் கிருபை தாருமே - தம்
ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை

ஆத்தும பாரம் கண்ணீரோடே

சோர்வின்றி நானும் வேண்டிடவே

ஜெபவரம் கிருபை தாருமே - தம்
கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை

காத்திருந்தே அடைந்திடவே

இயேசுவே உம்மை சந்திக்கவே

இரக்கமாய் கிருபை தாருமே - தம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com