ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய்த் துதித்து போற்றிப் பாடுங்கள்
இன்றைய தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
இயேசுவின் நாமமதை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதிபாடி மகிழ்வோம் - ஜாதி 
 ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு ஈந்தார்
சேதமின்றி எனைக் காத்தாரே
ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெய கீதம் பாட ஜெயமளிப்பார் 
 பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
சோதனை வேதனை சூழ்கையில்
சோர்ந்திடாமல் தாங்க பெலனளிப்பார் 
 எந்தன் பாவம் பாவும் மமன்னித்து மறந்தார்
சொந்தப் பிள்ளையாக மாற்றினார்
நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட 
 வானம் பூமி யாவும் மாறிப் போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய்க் காத்திருப்போரை - ஜாதி 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter