• waytochurch.com logo
Song # 27183

ஜீவனின் ஊற்றாமே இயேசு பரன் தீர்த்திடுவார் உந்தன் தாகமதை


ஆரு மற்றவனாய் நீ அலைந்தே

பாவ உளைதனிலே அமிழ்ந்தே

மாய்ந்திடாது உன்னை தூக்கி எடுத்தவர்

மந்தையில் சேர்ந்திடுவார் - வல்லவரே
வியாதியினால் நொந்து வாடுவதேனோ

நேயன் கிறிஸ்து சுமந்ததனை

சிலுவை மீதினில் தீர்த்ததாலே - இனி

சுகமடைந்திடுவாய் - வல்லவரே
பரனின் அன்பதை அகமதிலே

சொரிந்து தன் திரு ஆவலாய்

மாற்றியே தம்மைப் போல் தேவ சாயலாக்கி

மகிமை சேர்த்திடுவார் - வல்லவரே
வானமும் பூமியும் மாறிப் போயினும்

வாக்கு மாறாதவர் வல்ல மீட்பர்

காப்பார் வழுவாது உள்ளங்கையில் வைத்தே

கலங்கிடாதே நீ வா - வல்லவரே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com