• waytochurch.com logo
Song # 27186

ஜீவ நதியின் நீரோடைப் போல் கல்வாரியின் இரத்தம் பாய்ந்தோடுதே


கர்த்தர் என் பெலனும் கேடகமாய்

கருத்துடன் காத்திட அழைத்ததால்

கண்ணீர் கவலை நீங்கிடவே

களிப்பின் ஊற்றாய் மாற்றினீரே - ஜீவ
இயேசுவின் கரத்தின் கருவியாய்

நன்மை செய்ய அழைத்ததால்

வழுவாத வல்லமை வசனங்களை

வானவர் தந்து மாற்றினீரே - ஜீவ
சிலுவை சிந்தனை ஞானமாய்

சிறந்து விளங்க அழைத்ததால்

பழுதில்லாத உம் பலன்களை

பரத்தில் சேர்க்க மாற்றினீரே - ஜீவ
சபையின் மேன்மை சாட்சியாய்

சத்தியம் சொல்ல அழைத்ததால்

சந்தோஷ நதியின் வாழ்க்கையை

நாடெங்கும் பரப்ப மாற்றினீரே - ஜீவ
சீயோனின் சிறந்த சிகரமாய்

செழித்து வளர அழைத்ததால்

எக்காளம் தொனிக்கும் நேரத்தில்

மறுரூபம் ஆக மாற்றுவீரே - ஜீவ

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com