ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் தேவ குமாரன் மரித்தெழுந்தார்
பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
வேதாள கூட்டம் நடுங்கிடவே
அன்றதிகாலை மா இருள் வேளை
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார் - அல்லே
நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
சாவை ஜெயித்து சாட்சி அளித்து
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் - அல்லே
பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
என் மன ஜோதி தம் அருள் ஆவி
என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார் - அல்லே
நல் விசுவாசம் தந்திடுவார்
நம்பிடுவோரை எழப்பிடுவார்
எக்காள சத்தம் கேட்டிட நாமும்
ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே - அல்லே