• waytochurch.com logo
Song # 27192

சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மைக் காப்பவரே


வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்

உள்ளத்தின் உறுதி அசையாதே

ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்

ஏசு நம்மோடங்கு நடக்கின்றார்
ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்

ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்

கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்

கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்
காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்

கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்

ஜீவனாலும் மரணமானாலும் நம்

தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்
ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார்

ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி

யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து

ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com