• waytochurch.com logo
Song # 27195

சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாறிடுவேன் ஆ ஆ


பாவ பாரச் சுமையதால் சோர்ந்து

தளர்ந்ததென் ஜீவியமே- ஆ ஆ

சிலுவையண்டைவந்ததினால்

சிறந்த சந்தோஷங் கண்டதினால்

இளைப்படையாது மேலோகம்

ஏகுவேன் பறந்தே வேகம் - சிலுவை
எவ்விதக் கொடிய இடருக்கும் அஞ்சேன்

ஏசுவைச் சார்ந்து நிற்பேன்- ஆ ஆ

அவனியில் வியாகுலம் வந்தால்

அவரையே நான் அண்டிக்கொண்டால்

அலைமிக மோதிடும் அந்நாள்

ஆறுதல் அளிப்பதாய் சொன்னார் - சிலுவை
இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டு என்

இன்னல் மறந்திடுவேன் - ஆ ஆ

திருமறை இன்னிசை நாதம்

தேனிலும் இனிய வேதம்

தருமெனக் கனந்த சந்தோஷம்

தீர்க்குமென் இதயத்தின் தோஷம் - சிலுவை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com