• waytochurch.com logo
Song # 27196

சிலுவை மீதே தொங்கிய இயேசு என்னில் அன்பு கூர்ந்தார்


சுகந்த வாசைன பலியாய் தம்மை

உவந்து ஜீவன் தந்தார்

என்னில் அன்பு கூர்ந்ததாலே

என்னை அவருக்கே அர்ப்பணிப்பேன் - சிலுவை
கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து

பிரிக்க யாரால் கூடும்

உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ

முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் - சிலுவை
எம்மில் அன்பு கூர்ந்ததாலே

தம்மை தியாகம் செய்தார்

அவருடன் நான் அறையுண்டேனே

அவரே என்னில் ஜீவிக்கிறார் - சிலுவை
அறிவுக் கெட்டா நேசர் அன்பில்

அகலம் ஆழமுண்டோ

பகையாய் நின்ற பாவம் தகர்த்தார்

சபையில் மகிமை செலுத்திடுவோம் - சிலுவை
முடிவு வரையும் அன்பு கூர்ந்தார்

அடிமை வாழ்வடைய

அவரின் வருகை நாளில் நானும்

அவரைப் போல மாறிடுவேன் - சிலுவை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com