சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் நீரே சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே
என்னைக் காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே
ஆ ஹா ஹா அல்லேலூயா (8 ) ஆமென்
வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்துவோம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
ஆ ஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்
சாத்தான் உன்னை எதிர்த்த போதும்
ஜெயக் கிறிஸ்து உன்னோடு உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வாய்
ஆ ஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்