• waytochurch.com logo
Song # 27204

சீயோனே நீ விழித்தெழும்பிடுவாய் சாலேமின் ராஜனிதோ வருவதால்


பூமண்டலங்கள் கிடுகலங்கிடுதே

வான மண்டலங்களும் நடுங்கிடுதே

பாசமில்லா உம்மானிடர் பூவில்

பயந்தங்கு மிங்கும் ஓடுவதாலே - சீயோனே
கொலு மண்டலங்கள் திகிலடைந்திடுதே

கொடிய செயலும் தோன்றிடுதே

உதவியற்ற நின் உத்தமர் தவிப்பை

உந்தன் கரத்தால் தீர்த்திடுமிப்போ - சீயோனே
மாய உலகத்தை வெறுத்துவிட்டால் நீ

மாட்சி தங்கும் நகர் சேரலாமே

மகிமையின் சாயல் அணிந்தவராய் நாம்

மணவாளனோடு ஏகிடுவோமே - சீயோனே
பலவித துன்பங்கள் நிறைந்துமே வருதே

காரிருள் நாட்களும் நெருங்கிடுதே

அந்தகாரப் பிரபு வெளியாகு முன்னே

சந்தோஷ ராஜ்யத்தில் சேர்ந்திடலாம் நாம் - சீயோனே
திருச்சபையே உன் தீபங்களெல்லாம்

சூர்யப்பிரபையாய்த் திலங்கட்டுமே

மகிமையின் இரதத்துடன் உதித்திடும் போது

மணவாளனோடு நாம் மறுரூபமாவோம் - சீயோனே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com