• waytochurch.com logo
Song # 27207

சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் என்னில் பொங்குதே அல்லோலூய


வழி தப்பி நான் திரிந்தேன் பாவப்பழியதை சுமந்தலைந்தேன்

அவர் அன்புக்குரலே அழைத்தது என்னையே -2

அந்த இன்பநாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே - சந்தோஷம்
சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்

ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்

அந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே (2) - சந்தோஷம்
பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்

நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்

என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன் - சந்தோஷம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com