• waytochurch.com logo
Song # 27208

சந்தோஷ விண்ணொளியே இயேசு சாந்த சொரூபி அவர்


இன்ப பரலோகம் துறந்தவர்

துன்பம் சகித்திட வந்தவர்

பாவ மனிதரை மீட்டவர்

பலியாகவே பிறந்தார் - சந்தோஷ
பூலோக மேன்மைகள் தேடாதவர்

பேரும் புகழும் நாடாதவர்

ஒன்றான மெய் தேவன் இயேசுவே

என் ஆத்ம ரட்சகரே - சந்தோஷ
ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்

தேவாதி தேவ சுதன் இவர்

இயேசு அல்லாமல் வேறு யாருமில்லை

இரட்சண்யம் ஈந்திடவே - சந்தோஷ
ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்

அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்

எம்மைத் தம்மைப்போல மாற்றிடும்

இயேசுவைப் பின்பற்றுவோம் - சந்தோஷ
எங்கள் சமாதானப்பிரபு இவர்

இயேசு அதிசயமானவர்

வேதம் நிறைவேறும் காலமே

வேகம் வருகின்றாரே - சந்தோஷ

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com