• waytochurch.com logo
Song # 27209

சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே சர்வ வல்ல ஏசு என்னை இரட்சித்தார்


பேரின்ப கீதம் என்னில் பொங்குதே

போன நாட்கள் என்னைக் கர்த்தர் தாங்கினார்

சோதனை சூழ்ந்து என் நம்பிக்கை குன்றினும்

சோர்ந்தழியாமல் என்றும் காத்ததால் - ஆர்ப்பரித்து
இரட்சிப்பின் கீதம் என்னில் பொங்குதே

இரட்சகர் என் பாவம் முற்றும் மன்னித்தார்

மானிடர் மாறினும் அன்பை விட்டோடினும்

மா தேவ அன்பில் என்னைக் காத்ததால் - ஆர்ப்பரித்து
ஆனந்தக் கீதம் என்னில் பொங்குதே

ஆரவாரத்தோடே இயேசு தோன்றுவார்

ஆவலாய் விழித்தே ஆவியில் ஜெபித்தே

ஆயத்தமாய் நான் காத்து நிற்பதால் - ஆர்ப்பரித்து
சீயோனின் கீதம் என்னில் பொங்குதே

சீக்கிரம் வந்தென்னைச் சேர்த்துக் கொள்ளுவார்

பொன் முடி வேந்தனாம் எந்தை என் இயேசுவின்

பொன் மாளிகை நான் கிட்டிச் சேர்வதால் - ஆர்ப்பரித்து


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com