• waytochurch.com logo
Song # 27211

சத்திய வேதம் பக்தரின் கீதம் சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்


நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்

சுத்த பசும் பொன் தெளிந்திடும் தேன்

இதயம் மகிழும் கண்கள் தெளியும்

இருண்ட ஆத்துமா உயிரடையும் - சத்திய
பேதைகளிடம் ஞானம் அருளும்

வேத புத்தகம் மேன்மை தரும்

இரவும் பகலும் இதன் தியானம்

இனிமை தங்கும் தனிமையிலும் - சத்திய
வேதப் பிரியர் தேவ புதல்வர்

சேதமடையா நடத்திடுவார்

இலைகள் உதிரா மரங்கள் போல

இவர்கள் நல்ல கனி தருவார் - சத்திய
உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்

கள்ளங் கபடெல்லாம் அகற்றும்

கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்

கனமடைய வழிநடத்தும் - சத்திய
கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி

கன்மலையையும் நொறுக்கிடுமே

இதய நினைவை வகையாய் அறுக்கும்

இரு புறமும் கருக்குள்ளதே - சத்திய
வானம் அகலும் பூமி அழியும்

வேத வசனம் நிலைத்திருக்கும்

பரமன் வேதம் எனது செல்வம்

பரவசம் நிதம் அருளும் - சத்திய

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com